தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#TNPL: மதுரை பாந்தர்ஸ் தொடர்ச்சியாக 2ஆவது வெற்றி

திண்டுக்கல்: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் கோவை கிங்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வீழ்த்தியது.

TNPL

By

Published : Aug 3, 2019, 2:48 AM IST

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 18ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய மதுரை அணி வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அவ்வபோது விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடியாக ஆடிய அருண் கார்த்திக், சதம் அடித்து அசத்தினார். அவர் 61 பந்தில் 13 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிந்தார். இறுதியில் அதிரடியாக ஆடிய ஜெகதீசன் கவுசிக், 23 பந்தில் 43 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சதம் விளாசிய அருண் கார்த்திக்

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மதுரை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. கோவை பந்துவீச்சில் அஜித் ராம் இரண்டு விக்கெட்டும், கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீநிவாஸ், அந்தோனி தாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் இமாலய இலக்குடன் களமிறங்கிய கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர். அப்போது ஷாருக்கான் 24 ரன்கள் எடுத்திருந்தபோது அபிஷேக் தன்வார் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டார். அடுத்த ஓவரிலேயே ஆஷிக்கும் ரன் ஏதுமின்றி வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் அபினவ் முகுந்த் மற்றும் நிலைத்து ஆட மற்ற வீரர்கள் தொடர்ந்து பெவிலியன் திரும்பிக்கொண்டிருந்தனர்.

முகுந்த் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். மதுரை பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் கோவை அணி 20 ஓவரில் 172 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது. இதனால் மதுரை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

இதுவரை ஐந்து போட்டிகளில் ஆடியுள்ள மதுரை அணி மூன்று வெற்றியுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details