தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#BangladeshTriSeries2019: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம் - பகிர்ந்தளிக்கப்பட்ட கோப்பை! - வங்கதேசம் - ஆப்கானிஸ்தான்

டாக்கா: முத்தரப்பு டி20 தொடரின் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் இடையிலான இறுதிப்போட்டி மழையினால் கைவிடப்பட்டது.

#BangladeshTriSeries2019

By

Published : Sep 25, 2019, 11:28 AM IST

வங்கதேசம்-ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வந்தது. இத்தொடரில் நேற்று நடைபெறவிருந்த இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தை எதிர்கொள்ளவிருந்தது.

அதனைத்தொடந்து அங்கு பெய்த கனமழை காரணமாக ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கனமழை நீடித்ததால் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியானாது டாஸ் போடாமல் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆட்ட நடுவர்கள் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிக்கும் முத்தரப்பு தொடருக்கான கோப்பையை பகிர்ந்தளித்தனர்.

கோப்பையுடன் இரு அணி வீரர்களும்

மேலும் முத்தரப்பு தொடரின் தொடர் நாயகனாக ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் தேர்வு செய்யப்பட்டார். இவர் தனது அறிமுகத் தொடரிலேயே தொடர் நாயகன் பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #BangladeshTriSeries2019: ஆப்கானுக்கு ஷாக் கொடுத்த ஷாகிப்!

ABOUT THE AUTHOR

...view details