தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#Ashes2019: 4ஆவது டெஸ்ட்டிலும் ஆஸி. திணறல்! ஆபத்பாந்தவனாக களமாடுவாரா ஸ்மித்!

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்டின் நான்காவது போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி தடுமாறிவருகிறது.

stve

By

Published : Sep 5, 2019, 9:18 AM IST

Updated : Sep 5, 2019, 4:27 PM IST

உலகப்புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஆஷஸ் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவரும் இவ்விரு அணிகளும் இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில் ஆஸ்திரேலிய அணியும் ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியும் ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் நேற்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர்-மார்கஸ் ஹாரிஸ் களமிறங்கினர். இந்த டெஸ்ட் போட்டியிலும் டேவிட் வார்னர் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

விக்கெட் வீழ்த்திய மகிழ்சியில் ஸ்டுவர்ட் பிராட்

இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட வார்னர், ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து சிறிது இடைவேளையில் மார்கஸ் ஹாரிஸும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித்-மார்னஸ் லாபுக்ஸாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஸ்டீவன் ஸ்மித்-லாபுக்ஸாக்னே

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய லாபுக்ஸாக்னே அரைசதம் அடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித்தும் அரைசதமடிக்க அணியின் ஸ்கோர் உயரத்தொடங்கியது. பின் 67 ரன்களை எடுத்திருந்த நிலையில் லபிக்ஸாக்னே ஓவர்டன் என்பவர் வீசிய பந்தில் கிளீன் போல்டானார்.

முதல்நாள் ஆட்டத்தில் 44 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 170 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவன் ஸ்மித் ஏழு பவுண்டரிகள் உள்பட 60 ரன்களுடனும் டிராவிட் ஹெட் 18 ரன்கள் அடித்தும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து அணி சார்பில் பிராட் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Last Updated : Sep 5, 2019, 4:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details