ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கெனவே இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் வருகிற 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று நியூசிலாந்து அணி , விக்டோரியா லெவன் அணியுடனான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடுவதாக இருந்தது.
ஆனால் மெல்போர்னில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாட இரு அணி வீரர்களும் மறுப்பு தெரிவித்தனர். மேலும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம், மெல்போர்னில் 43 டிகிரி செல்சியல் வெப்பம் நிலவுவதாக அறிவித்ததையடுத்து இந்த முடிவினை நியூசிலாந்து அணி எடுத்துள்ளதாக தெரிவித்தது.