வெலிங்டன்: வங்கதேசத்திற்கு எதிராக இன்று (மார்ச் 26) நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
முதலில் பேட்டிங் தேர்வுசெய்த, நியூசிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்திருந்தது. கான்வே, டேரில் மிட்செல் ஆகிய இருவரும் சதமடித்து வங்கதேச அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
319 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய வங்கதேசம், தமீம் இக்பால் (1), சௌமியா சர்க்கார் (1), லிட்டன் தாஸ் (21) என அடுத்தடுத்து ஹென்றி பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
முகமது மிதுன் 6 ரன்களோடும், முஷ்பிகுர் ரஹீம் 21 ரன்களோடும், மெஹிடி ஹசன் ரன்னேதும் எடுக்காமலும் வெளியேற வங்கதேசம் 77/6 என்ற நிலையில் தத்தளித்தது. மறுமுனையில் முகமதுல்லா மட்டும் நம்பிக்கையோடு விளையாடினார் என்றாலும், அவருக்கு கைக்கொடுக்க வேறுயாரும் இல்லாததால், 42.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 154 ரன்களில் வங்கதேசம் சுருண்டது.
நியூசிலாந்து 164 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியைப் பதிவுசெய்தது. நியூசிலாந்தைப் பொறுத்தவரை, நீஷாம் ஐந்து விக்கெட்டுகளையும், மாட் ஹென்றி நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றுள்ளது.
இதையும் படிங்க:அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்?