இலங்கையில் உள்ள காட்டுநாயக்கத்தில் இலங்கை வாரியத் தலைவர் லெவன் அணிக்கு எதிரான நியூசிலாந்தின் மூன்று நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகின்றது. அந்த ஆட்டத்தின் இடைவேளையின்போது, நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனின் 29ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை ரசிகர்கள் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடினர். இந்தக்காணொலி சமூக வலைதளங்கலில் தற்போது வைரலாக பரவிவருகிறது.
கேன் வில்லியம்சனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இலங்கை ரசிகர்கள்! - fans
இலங்கை: போட்டியின் நடுவே கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் தனது ரசிகர்களுடன் மைதானத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடினார்.
williamson
கிரிக்கெட் போட்டியின் நடுவே வீரருக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகூறி கேக் வெட்டி, அதை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் பகிர்ந்து கொண்டாடியது உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.