இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தொடரை 3-2 என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியது. இந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணயில் இருந்து தோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டு இளம் வீரர் ரிஷப் பந்துக்கு வாய்ப்பும் கொடுக்கப்பட்டது.
ஆனால், தனக்கு வழங்கிய வாய்ப்பை ரிஷப் பந்த் சரியாக பயன்படுத்தவில்லை. இந்திய அணி கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்ததற்கு, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது மிக முக்கியமான காரணம்.
குறிப்பாக, நேற்றைய போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். இதனால், தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர்தான் யாரும் இல்லை என்று பார்த்தால், மாற்று பேட்ஸ்மேனும் இல்லை என்பது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.