தமிழ்நாடு

tamil nadu

அங்கே சிக்சர்... இங்கே மரணம்....  நீஷமிற்கு ஏற்பட்ட மற்றொரு சோகம்!

By

Published : Jul 18, 2019, 11:59 PM IST

உலகக்கோப்பை இறுதிப்போட்டியின்போது, நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷமின் பள்ளி கிரிக்கெட் பயிற்சியாளர் டேவ் கோர்டன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

அங்கே சிக்சர்... இங்கே மரணம்....  நீஷமிற்கு ஏற்பட்ட மற்றொரு சோகம்

ரசிகர்கள் எதிர்பார்க்காதவாறு பல்வேறு திருப்பங்களுடன் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை ஃபைனல் போட்டி நடைபெற்றது. இதில், ஆட்டம் இரண்டு முறை சமனில் முடிந்ததால், பவுண்ட்ரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியன் ஆனது. கைக்கு எட்டும் தூரம் வரை வந்து கோப்பையை வெல்ல முடியாத வருத்தத்தில் இருக்கும் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷமிற்கு மேலும் ஒரு செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜிம்மி நீஷம்

சூப்பர் ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்மி நீஷம், கப்தில் ஆகியோர் களமிறங்கினர். ஆர்ச்சர் வீசிய அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் நீஷம் சிக்சர் அடித்தார். அந்த சமயத்தில், ஜிம்மி நீஷமின் பள்ளி கிரிக்கெட் பயிற்சியாளர் டேவ் கோர்டன் மருத்துவமனையில் தன்னுடைய மூச்சை நிறுவித்திவிட்டதாக அவரது மகள் தெரிவித்தார்.

இறுதிப் போட்டியில் கடைசி ஓவரின்போது அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றதாக செவிலியர் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஜிம்மி நீஷம் தனது ட்விட்டர் பக்கத்தில், டேவ் கோர்டன் எனது பள்ளி ஆசிரியர், பயிற்சியாளர், நல்ல நண்பரும்கூட. அவரது பயிற்சியின் கீழ் விளையாட நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். அனைத்திற்கும் நன்றி. உங்களது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என பதிவிட்டிருந்தார்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு, டேவ் கோர்டனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஆக்லாந்தில் 25 வருடங்களுக்கும் மேலாக கோர்டன் பல இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியளித்துள்ளார். அவரது பயிற்சியில் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஃபெர்குசனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details