இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் உள்ளது. இந்த அகாடமியின் தலைவராக சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். தற்போது ரிஷிகேஷ் கனித்கர் பேட்டிங் பயிற்சியாளராகவும், ரமேஷ் பவார் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான ராகுல் டிராவிட்டுக்கு பயிற்சியாளர் அறிக்கையை சமர்பிக்க உள்ளனர். அந்த அறிக்கையானது இவர்கள் பயிற்சியாளர்களாக இந்தியா ஏ, இந்திய அண்டர் 19, இந்திய அண்டர் 23 போன்ற அணிகளுடன் அவர்கள் பங்கேற்கும் தொடர்களுக்கு பயணிக்க வேண்டும் என்பதாகும்.