இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இச்சுற்றுப் பயணத்தில் இந்திய அணியில் அறிமுக வீரராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் பங்கேற்று, சிறப்பாக பந்து வீசி தனது அபாரத் திறனை வெளிப்படுத்தினார்.
இந்தநிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டிக்குத் திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் நடராஜனுக்கு சின்னப்பம்பட்டி, பாப்பம்பாடியில் பொது மக்கள், உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்.