தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தமிழ்நாடு அணியிலிருந்து முரளி விஜய் விலகல்!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணி சூப்பர் லெக் சுற்றை எட்டிய நிலையில், தற்போது காயம் காரணமாக அந்த அணியிலிருந்து முரளி விஜய் விலகியுள்ளார்.

Murali vijay

By

Published : Nov 19, 2019, 1:15 AM IST

நடப்பு சீசனுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் தற்போது சூப்பர் லெக் சுற்றை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி குரூப் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அந்த அணி விளையாடிய ஏழு போட்டிகளில் ஆறு வெற்றி, ஒரு தோல்வி என 20 புள்ளிகளுடன் சூப்பர் லெக் சுற்றை எட்டியுள்ளது. நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள சூப்பர் லெக் போட்டியில் தமிழ்நாடு அணி, பரோடா அணியுடன் பலபரீட்சை நடத்தவுள்ளது.

இந்நிலையில், கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தமிழ்நாடு அணியிலிருந்து முரளி விஜய் விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதிலாக எம். சித்தார்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடிய முரளி விஜய், 174 ரன்களை அடித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details