மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 31ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸில் டி வில்லியர்ஸ்-மோயின் அலியின் அதிரடி ஆட்டத்தால் 171 ரன்களை எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர்களான டி காக், ரோகித் ஷர்மா பெங்களூரு அணி பந்து வீச்சாளர்களை திணறவைத்தனர்.