இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி ஜம்மு- காஷ்மீரில் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய கிரிக்கெட் அகாடமியை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அவர் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்துடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜம்முவில் கிரிக்கெட் அகாடமி தொடங்கும் ’தல’! - jammu kashmir
ஜம்மு - காஷ்மீரில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிரிக்கெட் அகாடமியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Dhoni
தற்போது இந்திய பாதுகாப்புப்படையில் கவுரவ லெப்டினண்ட் கர்னல் பொறுப்பிலுள்ள தோனி, கடந்த ஒரு மாதமாக இந்திய பாதுகாப்புப் படையின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் பகுதியில் அகாடமி தொடங்க திட்டமிட்டுள்ள தோனி, அங்குள்ள இளைஞர்களை ஊக்குவிக்க இந்த அகாடமியை தொடங்கவிருப்பதாகவும், அங்கு இலவசமாக பயிற்சியளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.