இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இன்று தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் தோனி குறித்து தொடர்ந்து பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில், தோனி பிறந்தநாளுக்காக அவரின் சக சிஎஸ்கே அணி வீரர் பிராவோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பாடல் தோனியின் சாதனைகளையும், தோனியின் பண்புகளையும் குறிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்தப் பாடல், அவரது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.