இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு 2011ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்புப் படையின் லெப்டினன்ட் கர்னல் பதவி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததையடுத்து, இந்திய பாதுகாப்புப் படையுடன் பயிற்சிகளை மேற்கொள்ள விண்ணப்பித்திருந்தார்.
காஷ்மீரின் பாதுகாவலனாகும் தல தோனி!
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பாதுகாப்புப் படையினரோடு பாராசூட் ரெஜிமெண்ட் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் வரும் 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை காஷ்மீரில் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.
தோனி
இதற்கு அனுமதி கிடைத்ததையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு என்னை தேர்வு செய்ய வேண்டாம் என கடிதம் கொடுத்தார். இந்நிலையில், பாராசூட் ரெஜிமெண்ட் பயிற்சி செய்துவரும் தோனி, வரும் 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை காஷ்மீரின் விக்டர் படையுடன் இணைந்து ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி காலத்தின்போது தோனி பாதுகாப்புப் படையினரோடு தங்குவார் எனவும் கூறப்பட்டுள்ளது.