தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிஎஸ்கே வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் - சிஎஸ்கே - சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு கரோனா பரிசோதனை

ஐபிஎல் தொடரில் பங்கேற்க சிஎஸ்கே வீரர்கள் சென்னைக்கு கூடுவதற்கு முன் தோனி உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிஎஸ்கே அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ms-dhoni-and-boys-to-get-covid-19-test-done-before-assembling-in-chennai-csk
Tags

By

Published : Aug 4, 2020, 12:19 AM IST

கரோனா வைரஸ் காரணமாக வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தள்ளிவைக்கப்பட்டதால், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறள்ளது.

இதில் பங்கேற்கபதற்காக சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து அணிகள் ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் சென்னை அணி முதலில் சென்னைக்கு வந்தபின் , மத்திய அரசின் அனுமதி பெற்றபிறகு மற்ற அணிகளுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சிஎஸ்கே வீரர்கள் சென்னைக்கு கூடுவதற்கு முன் தோனி உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிஎஸ்கே அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிஎஸ்கே தரப்பில் கூறியதாவது,

சென்னையிலிருந்து தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வோம். சென்னையில் கூடுவதற்கு முன்னதாக தோனி உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட அடுத்த 48 மணி நேரத்தில் விமானத்தில் பயணம் மேற்கொள்வர்.

இது தொடர்பாக அரசாங்கத்தின் அனுமதிக்காகக நாங்கள் காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன், நாங்கள் விசா பெறுவதற்ங செயல்முறையைத் தொடங்குவோம். உயர்ந்து கடைப்பிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டப் பிறகு பயிற்சி முகாம் குறித்த முக்கிய முடிவுகளை நாங்கள் எடுப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details