தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முகமது ஷமிக்கு எதிராக மனைவி வழக்கு; பிடி வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mohammed shami

By

Published : Sep 2, 2019, 7:49 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான முகமது ஷமி தற்போது, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறார். இவரது மனைவி ஹசின் ஜஹானுக்கும் இவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. இதையடுத்து, தன்னை முகமது ஷமி, அவரது சகோதரர் ஹசித் அஹமது ஆகியோர் சித்திரவதை செய்ததாக அவரது மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். அதனடிப்படையில், இருவர் மீதும் ஐபிசி 498 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த அலிப்பூர் நீதிமன்ற கூடுதல் தலைமை நீதிபதி, முகமது ஷமி அவரது சகோதரர் ஆகிய இருவரையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தும், இவர்கள் நேரில் ஆஜராகாமல் இருந்தனர். இதையடுத்து, முகமது ஷமி, அவரது மனைவி ஹசின் ஜஹான் இருவரும் மாறி மாறி ஊடகங்களில் தங்கள் தரப்பு நியாயத்தை கூறி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த அலிப்பூர் நீதிமன்றம், முகமது ஷமியும், அவரது சகோதரரும் 15 நாட்களுக்குள் காவல்துறை முன் சரணடைய வேண்டும் என்றும், இல்லையேல் இருவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் உத்தரவிட்டு, கைது வாரண்ட்டையும் பிறப்பித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details