இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கித் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 14ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து அணி, நேற்றைய தினம் இலங்கைக்கு சென்றது. அங்கு அவர்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையின் முடிவில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.