தற்போது நடைபெற்றுவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் செய்தது. இதில் தொடக்கத்திலேயே தொடக்க ஆட்டக்காரர் வார்னர் டக் அவுட்டிலும் ஹாரிஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய லாபுக்ஸாக்னே- ஸ்மித் இணை எதிரணியின் பந்துவீச்சை நான்கு திசைகளிலும் சிதறடித்தது. காயம் காரணமாக மூன்றாவது டெஸ்டிலிருந்து விலகியிருந்த ஸ்டீவன் ஸ்மித் எந்த ஃபார்மோடு சென்றாரோ அப்படியே திரும்பியுள்ளார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியின்போது ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் வீசிய அகலப் பந்தை தன் பேட்டால் கவர் திசை நோக்கி அடித்து கீழே விழுந்தார். அந்த ஷாட்டானது ரசிகர்கள் மத்தியிலும் இணயத்திலும் வைரலாகிவருகின்றது.
இதனிடையே, மழை காரணமாக நேற்று மைதானதில் பலத்த காற்று வீசத் தொடங்கியது. அப்போது மைதானத்திற்கு வெளியே இருந்து சிறுவர்கள் விளையாடும் பிளாஸ்டிக் பந்து மைதனத்திற்கு வந்தது. அதனைக் கண்ட ஸ்டீவன் ஸ்மித் தன் பேட்டினால் அந்தப் பந்தை பவுண்டரி நோக்கி விளாசினார்.
இதனைக்கண்ட நெட்டிசன்கள் தற்போது, ’ஸ்மித் இருக்கும் ஃபார்மிற்கு கிரிக்கெட் பந்து கூட... கால்பந்து போலதான் தெரியும்” எனப் பதிவு செய்து அவரின் புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கிவருகின்றனர்.
பிளாஸ்டிக் பந்துடன் விளையாடிய ஸ்டீவன் ஸ்மித்
மழை காரணமாக நேற்றைய போட்டி 44 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுக்ஸாக்னே 67 ரன்கள் அடித்து ஆட்மிழந்தார். ஸ்டீவன் ஸ்மித் 60 ரன்களுடன் களத்தில் உள்ளார்.