ஐபிஎல் போட்டிகளுக்கான பரிசுத்தொகை இந்த ஆண்டு 50 விழுக்காடுவரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து ஐபிஎல் அணியின் அலுவலர் ஒருவர் பேசுகையில், '' ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகையை குறைப்பது பற்றி அணிகளின் உரிமையாளர்கள் யாருடனும் ஆலோசனை நடத்தப்படவில்லை. இந்த விவகாரம் பற்றி டெல்லி கேப்பிடல்ஸ் அணிதான் முதலில் விவாதம் நடத்தியது. இதுகுறித்து கடிதம் அனுப்பலாம் என முடிவு செய்தபோது மும்பை மற்றும் சென்னை அணிகளைத் தவிர்த்து அனைத்து அணிகளும் ஒப்புக்கொண்டனர். சென்னை, மும்பை அணிகளின் உரிமையாளர்களை தொடர்புகொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
இறுதியாக அனைத்து உரிமையாளர்களும் கையெழுத்திட்ட கடிதம் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரங்களில் அது அவரது கைகளில் இருக்கும்.