2019-20ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் லீக் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கான சிறந்த அணியை பிக் பாஷ் தொடரில் பங்கேற்ற அணிகளின் பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதில் பிக் பாஷ் தொடரின் சிறந்த அணியை வழிநடத்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியிலிருந்து ஸ்டோனிஸ், ஹாரிஸ் ராவ்ஃப் , மேக்ஸ்வெல் ஆகிய மூன்று வீரர்களும், அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியிலிருந்து ஜானத்தன் வெல்ஸ், ரஷீத் கான், பீட்டர் சிடில் ஆகிய மூன்று வீரர்களும், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் ஜோஷ் இங்கிலீஸ், மிட்சல் மார்ஷ் ஆகிய வீரர்களும், தண்டர்ஸ் அணியிலிருந்து டேனியல் சாம்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியிலிருந்து மேத்யூ வேட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அணி விவரம்:மேக்ஸ்வெல் (கேப்டன்) , ஸ்டோனிஸ், வேட், மேக்ஸ்வெல், ஜானத்தன் வெல்ஸ், மிட்சல் மார்ஷ், டாம் கரண், ரஷீத் கான், டேனியஸ் சாம்ஸ், பீட்டர் சிடி, ஹாரிஸ் ராவ்ஃப்.
இதையும் படிங்க: பிக் பாஷ் லீக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிட்னி சிக்சர்ஸ்!