ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களில் அதிரடி ஆட்டத்தால் இலங்கை பந்துவீச்சாளர்களைச் சிதறடித்தனர்.
கேப்டன் பின்ச்சிற்கு பின்வந்த மேக்வெல் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பவுண்டரிகளும் சிக்சருமாக விளாசித்தள்ளினார். அப்போது ரஜித்தா வீசிய 18ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் சிக்சர் அடித்த அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் இந்திய வீரர் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் பாணியில் அந்த சிக்சரை விளாசினார்.