இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்றது.
இதையடுத்து நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணியின் கேப்டன் வில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணியில் தொடக்க வீரர் காலெப் ஜுவெல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, தொடர்ந்து வில் புக்கோவ்ஸ்கி களமிறங்கினார்.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வில் புக்கோவ்ஸ்கி 23 ரன்கள் எடுத்திருந்தபோது, ரன் ஓடுகையில் தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து காயம் காரணமாக ரிடையர்ட் ஹர்ட்டாகி ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணியின் கேப்டன் வில் புக்கோவ்ஸ்கி இதுகுறித்து வில் பேசுகையில், ''எனது பேட் சிக்கிக்கொண்டதை அறிகிறேன். என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் நிலை தடுமாறி கீழே விழுந்தேன். இதனால் எனது தலையில் காயம் ஏற்பட்டது. கீழே விழுந்தபோது உடனடியாக எழுந்துவிட்டேன். ஆனால் அடுத்த 15 நிமிடங்களில் தான் காயத்தின் தீவிரத்தன்மை தெரிந்தது. நிச்சயம் சிகிச்சைக்கு பின்னர், விரைவில் கிரிக்கெட்டிற்கு திரும்புவேன்'' என்றார்.
வில் புக்கோவ்ஸ்கி காயம் காரணமாக வெளியேறியுள்ளதால், கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணியின் கேப்டனாக ஜேக் லேமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சாஹலின் டிக் டாக்கில் இருக்கும் மூன்றாவது வீரர் யார்?