இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்கள் தேர்வு, பயிற்சியாளர் தேர்வு என பல்வேறு குழப்பங்கள் நீடித்துவரும் நிலையில், தற்போது அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் மனோஜ் திவாரி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் ட்விட்டர் உரையாடல் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் பார்த்தீவ் பட்டேலின் விக்கெட்டை ரன் அவுட் முறையில் எடுத்திருந்த வீடியோவை பதிவிட்டு ”நான் பார்க்காமல் அடித்த ரன் அவுட் ஆகும். நான் 33 தான், ஆனால் களத்தில் 23 என பதிவிட்டிருந்தார்”.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்த ஹர்பஜன் சிங், ”நீங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமாக இருந்தீர்கள் சகோதரரே.. இப்படி ஒரு நிகழ்வை நிகழ்த்திய பிறகும் நீங்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டீர்கள்” என என்றார்.
ஹர்பஜன் சிங்கின் கேள்விக்கு ”உண்மை என்ன என்று சொன்னதற்கு நன்றி பஜ்ஜி. நான் உங்கள் மீது ஏன் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஒரு நீல நிற டிக் கொண்ட ஒருவர் முன் வந்து என் சுயசரிதையை கூறிவுள்ளார்” என்று மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹர்பஜன் சிங் மற்றும் மனோஜ் திவாரி ஆகிய இருவருமே நீண்டகாலமாக இந்திய அணியில் இடமில்லாமல் தவித்துவருகின்றனர். ஹர்பஜன் சிங்கை பொறுத்த வரையில் அவருக்கென ஒரு இடத்தை கொண்டு, வயது மூப்பு காரணமாகவே அணியில் இடமில்லாமல் தவிக்கிறார். ஆனால் திவாரிக்கு வாய்ப்புகள் என்பது மிகக்குறைவாகவே அமைந்ததினால் அவரால் தனக்கென ஒரு இடத்தை நிறப்பமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.