தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 7, 2019, 10:41 AM IST

ETV Bharat / sports

இந்தியா - வங்கதேசம் பகலிரவு டெஸ்ட்: வேகமாக விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

கொல்கத்தா: இந்தியா - வங்கதேசம் இடையே நடைபெறும் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத்தீர்ந்துள்ளன.

eden garden

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி இந்தூரிலும் இரண்டாவது போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.

குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்திய அணி முதன்முறையாக பகல் - இரவு ஆட்டத்தில் விளையாடவுள்ளதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த புதிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி இந்த பகலிரவு போட்டிக்கான முதல் மூன்று நாள்களுக்கான 30 விழுக்காடு இணைய டிக்கெட்டுகள் (5,905 டிக்கெட்டுகள்) வேகமாக விற்றுத்தீர்ந்துள்ளன. இதேபோன்று நான்காம் நாள் ஆட்டத்திற்கான 3500-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளதாக பெங்கால் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இப்போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கில் பெங்கால் கிரிக்கெட் வாரியம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. அதன்படி இப்போட்டியின் தொடக்க விழாவுக்கு வருமாறு இருநாட்டு பிரதமர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இப்போட்டியில் பல்வேறு விளையாட்டு நட்சத்திரங்களையும் பெங்கால் கிரிக்கெட் வாரியம் கௌரவப்படுத்தவுள்ளது.

இந்திய டெஸ்ட் அணி

மேலும் 2000ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியா - வங்கதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களையும் சச்சின் டெண்டுல்கரையும் இப்போட்டிக்கு அழைத்துவரவுள்ளதாக என்று பிசிசிஐ புதிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அது தவிர முன்னாள் இந்திய கேப்டன்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிக ரசிகர்களை ஈர்க்கும் நோக்கில் இப்போட்டியைக் காண ரூ.50, 100, 150 ஆகிய விலையில் தினசரி டிக்கெட் விலையை அறிவித்தது பெங்கால் கிரிக்கெட் நிர்வாகம். இதுபோன்ற காரணங்களால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதோடு ரசிகர்களும் டிக்கெட்டுளை வாங்கிவருகின்றனர்.

மேலும் படிக்க: சேவாக்கின் அப்பர் கட் ஷாட்டை முயற்சித்த ஸ்மித்

ABOUT THE AUTHOR

...view details