தமிழ்நாடு

tamil nadu

டிஎன்பிஎல்: அதிரடி காட்டிய மதுரை பேந்தர்ஸ் அணி வெற்றி!

By

Published : Jul 20, 2019, 11:50 PM IST

திண்டுக்கல்: தூத்துக்குடி டூட்டி பேட்ரியட்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை பேந்தர்ஸ் அணி.

madurai-panthers-team-in-action

நடைபெற்று வரும் டிஎன்பிஎல் டி20 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணி, தூத்துக்குடி டூட்டி பேட்ரியட்ஸ் அணியை எதிர்த்து மோதியது. முதலில் டாஸ் வென்ற பேட்ரியட்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பந்தை பவுண்டரிக்கு விளாசும் ஸ்ரீனிவாசன்

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீனிவாசன் தனது சிறப்பான ஆட்டத்தினால் அரைசதம் அடித்தார். அவர் 41 பந்துகளில் 55 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் பேட்ரியட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது. மதுரை பேந்தர்ஸ் அணி சார்பாக கிரன் ஆகாஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மதுரை பேந்தர்ஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்களான அருண் கார்த்திக் மற்றும் சரத் ராஜ்யின் அதிரடி பேட்டிங்கால் தூத்துக்குடி அணியை துவம்சம் செய்தனர்.

பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் அருண் கார்த்திக்

மதுரை பேந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 12. 2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பேந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் கார்த்திக் 32 பந்துகளில் 65 ரன்களும், சரத் ராஜ் 21 பந்துகளில் 33 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய அருண் கார்த்திக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details