வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்து வருபவர் கிரேக் பிராத்வெயிட். இவர் கடந்த மாதம் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்ச்சைகுரிய முறையில் பந்து வீசியதாக புகார் எழுந்தது.
இதனால் ஐசிசி அவருக்கு பந்துவீச்சு சோதனையை செய்ய வேண்டும் என உத்திரவிட்டிருந்தது. இந்நிலையில் ஐசிசி அவர் மீதான புகாரை விலக்கி மீண்டும் பந்துவீச அனுமதியளித்துள்ளது.
இதனால் இவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் இனி தடையின்றி பந்துவீசலாம் என்று ஐசிசி அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸின் கிரேக் பிராத்வெயிட் சர்ச்சைக்குரிய பந்துவீச்சு புகாரில் இத்துடன் இரண்டு முறை சிக்கியிருக்கிறார்.
இதற்கு முன் இவர் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உள்ளாடை சர்ச்சை; கூலாக பதிலளித்த பும்ரா!