தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐசிசி தரவரிசை: முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியர்கள்! ஷாய் ஹோப் இமாலய முன்னேற்றம்! - ஐசிசி தரவரிசை பட்டியல்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடைய ஆண்டின் இறுதிகட்ட ஒருநாள் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.

Shai Hope entered the top 10 of the,ICC ODI Rankings for batting
Shai Hope entered the top 10 of the,ICC ODI Rankings for batting

By

Published : Dec 24, 2019, 10:11 AM IST

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டின் இறுதிகட்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.

பேட்ஸ்மேன் தரவரிசை:

ஐசிசியின் ஒருநாள் போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், துணைக்கேப்டன் ரோஹித் சர்மா 873 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 834 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர், ஷாய் ஹோப் இந்திய அணியுடன் விளையாடிய சிறப்பான ஆட்டத்தின் மூலம் 782 புள்ளிகளைப் பெற்று ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

ஆல் ரவுண்டர் தரவரிசை:

ஐசிசியின் ஒருநாள் ஆல் ரவுண்டருக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் 319 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி 307 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், பாகிஸ்தான் அணியின் இமாத் வாசிம் 295 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.

இந்த பட்டியலில் இந்திய அணியிலிருந்து ஒரு வீரர்கள் கூட இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பவுலிங் தரவரிசை:

ஜஸ்ப்ரிட் பும்ரா

இந்தப் பட்டியலில் கடந்த சில மாதங்களாக ஒருநாள் போட்டியில் இடம்பெறாமல் இருந்த இந்திய அணியின் ஜஸ்ப்ரிட் பும்ரா 785 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணியின் டிரண்ட் போல்ட் 740 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் நீடித்து வருகின்றனர். இதில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளார் முஜீப் உர் ரஹ்மான் 707 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தில் நீடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான கோலி!

ABOUT THE AUTHOR

...view details