இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தற்போதைய தலைமுறையினர்களின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு போட்டியின்மூலமும் அவர், பல்வேறு சாதனைகளைப் புரிந்துவருகிறார். அந்தவகையில், புனேவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர், 254 ரன்கள் எடுத்ததன் மூலம் சச்சினின் இரண்டு சாதனைகளை முறியடித்துள்ளார்.
சச்சினின் மற்றொரு சாதனையும் காலி... கிங் கோலியின் வேற லெவல் பேட்டிங்! - சச்சினின் சாதனையை முறியடித்த கோலி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம், இந்திய அணியின் கேப்டன் கோலி சச்சினின் இரண்டு சாதனைகளையும் முறியடித்துள்ளார்.
1. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்களான சச்சின் (6), சேவாக் (6) ஆகியோரது சாதனைகளை கோலி காலி செய்துள்ளார்.
2. இதைத்தவிர, சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக 21,000 ரன்களைக் குவித்த முதல் பேட்ஸ்மேன் சச்சினின் மைல்கள் சாதனையையும் கோலி தனதாக்கிக்கொண்டார். சச்சின் 473 இன்னிங்ஸில் 65 சதங்களுடன் இச்சாதனையை எட்டிய நிலையில், கோலி 435ஆவது இன்னிங்ஸிலேயே இதனை எட்டினார். கோலி இச்சாதனை படைக்க சச்சினை விடவும் 38 இன்னிங்ஸ்கள் குறைவாக எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.