தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஸ்டீவ் ஸ்மித்தை ஆதரித்த கோலிக்கு ஐசிசி விருது! - ஸ்டீவ் ஸ்மித்தை ஆதரித்த கோலி வீடியோ

ஐசிசியின் 2019ஆம் ஆண்டின் சிறந்த உத்வேகத்துடன் ஆடிய வீரருக்கான விருதை  இந்திய அணியின் கேப்டன் கோலி வென்றுள்ளார்.

Kohli bags ICC's '2019 Spirit of Cricket Award' for his superb gesture during WC game
Kohli bags ICC's '2019 Spirit of Cricket Award' for his superb gesture during WC game

By

Published : Jan 15, 2020, 2:08 PM IST

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஐசிசி விருது வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், 2019ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியலை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில், ஒரு பகுதியாக சிறந்த உத்வேகத்துடன் ஆடிய வீரருக்கான விருதை இந்திய அணியின் கேப்டன் கோலி வென்றுள்ளார்.

உலகக்கோப்பை ஒருநாள் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை கேலி செய்வதற்கு பதில் அவருக்கு ஆதரவு தெரிவியுங்கள் எனக் கோலி இந்திய ரசிகர்களிடம் சைகை காட்டினார். இதற்காகத்தான் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கோலி - ஸ்டீவ் ஸ்மித் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில், கோலியின் இந்தச் செயல் ரசகிர்களை பெரும் ஆச்சரியப்படவைத்தது. தற்போது இவ்விரு பேட்ஸ்மேன்களுக்கும் இடையே யார் சிறந்த வீரர் என்ற ஆரோக்கியமான போட்டிதான் நிலவிவருகிறது.

இதையும் படிங்க: விராட் கோலியின் படத்தை தலையில் பதித்த ரசிகர்

ABOUT THE AUTHOR

...view details