தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரஞ்சி கோப்பை: அரையிறுதிப் போட்டிக்குத் தேர்வான அணிகள்! - ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டி

ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு குஜராத், கர்நாடகா, சவுராஷ்டிரா, பெங்கால் ஆகிய நான்கு அணிகள் தேர்வாகியுள்ளன.

Karnataka, Gujarat, Saurashtra, Bengal reached semis
Karnataka, Gujarat, Saurashtra, Bengal reached semis

By

Published : Feb 24, 2020, 4:51 PM IST

இந்தியாவில் நடைபெற்றுவரும் பாரம்பரிய உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மூன்று பிரிவுகளின்கீழ் மொத்தம் 38 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் லீக் போட்டி புள்ளிப்பட்டியலில் அணிகள் எடுத்த புள்ளிகளின் அடிப்படையில், எட்டு அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

கடந்த 20ஆம் தேதி தொடங்கிய காலிறுதிச்சுற்றில் சவுராஷ்டிரா-ஆந்திரா, கர்நாடகா-ஜம்மு காஷ்மீர், பெங்கால்-ஒடிசா, குஜராத்-கோவா அணிகள் பலப்பரீட்சை செய்தன.

குஜராத்-கோவா

இத்தொடரில் நடைபெற்ற முதலாவது காலிறுதி ஆட்டத்தில் குஜராத் - கோவா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 464 ரன்கள் வித்தியாசத்தில் கோவாவை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.

பெங்கால்-ஒடிசா

இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் மோதிய பெங்கால்-ஒடிசா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் முடிவேதுமின்று சமனில் முடிவடைந்தது. இருப்பினும் குஜராத் அணி தனது முதல் இன்னிங்ஸில் ஒடிசா அணியைவிட முன்னிலைப் பெற்றிருந்ததால் காலிறுதிச் சுற்றுக்கு நேரடியாகத் தகுதியடைந்தது.

கர்நாடக - ஜம்மு காஷ்மீர்

மூன்றாவது காலிறுதிச் சுற்றில் கர்நாடக அணி, ஜம்மு காஷ்மீர் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் கர்நாடகா 167 ரன்கள் வித்தியாசத்தில் ஜம்மு காஷ்மீரை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றது.

சவுராஷ்டிரா-ஆந்திரா

இத்தொடரின் கடைசி காலிறுதிச்சுற்றில் விளையாடிய சவுராஷ்டிரா-ஆந்திரா அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் முடிவேதுமின்றி சமனில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் ஆந்திரா அணியைவிட முன்னிலையில் இருந்ததால், காலிறுதிச்சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றது.

இந்நிலையில் வருகிற 29ஆம் தேதி நடக்கவுள்ள ரஞ்சி கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் குஜராத் அணி சவுராஷ்டிரா அணியையும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கர்நாடக அணி, பெங்கால் அணியுடனும் பலப்பரீட்சை செய்யவுள்ளன.

இதையும் படிங்க: அதிரடி சச்சின், கலக்கல் கபில்தேவ் - மொடீரா உருவாக்கமும் வரலாறும்

ABOUT THE AUTHOR

...view details