பாலிவுட் இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ள படம் '83'. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற சில காலங்களிலேயே இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்தவர் கபில் தேவ். கடந்த 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதோடு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் வென்று முதல் உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்த சுவாரஸ்யமான நிகழ்வை கருவாக கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட உள்ளது.
இத்திரைப்படத்தில் கபில்தேவாக பாலிவுட் முன்னணி நட்சத்திரமான ரன்வீர் சிங் நடிக்கிறார். திரைப்படத்தின் கதை உண்மை சம்பவம் என்பதால் படக்குழுவிற்கு உறுதுணையாக கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இருந்து வருகிறார்.