தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'தற்காலிக சிறை'யாக மாறிய கபில் தேவ் ஆடிய கிரிக்கெட் மைதானம்!

சண்டிகர்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆடிய மொகாலி மைதானம், தற்போது ஊரடங்கு மீறுபவர்களுக்கான தற்காலிக சிறையாக மாற்றப்ப்பட்டுள்ளது.

kapil-dev-yuvraj-singh-training-ground-turns-into-a-temporary-jail-due-to-corona-virus
kapil-dev-yuvraj-singh-training-ground-turns-into-a-temporary-jail-due-to-corona-virus

By

Published : Mar 27, 2020, 9:25 AM IST

சண்டிகர் மாநிலத்தின் மொகாலியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில்தான் இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் தங்களது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினர். 1990ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியும் இந்தக் கிரிக்கெட் மைதானத்தில்தான் நடைபெற்றது.

தற்போது இந்த மைதானம் கரோனா வைரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கான தற்காலிக சிறையாக மாற்றப்பட்டுள்ளது. 15.32 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானம் 20 ஆயிரம் பேர் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டது.

கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால், பலரும் இந்திய தண்டனைச் சட்டம் 188 பிரிவின்படி கைதுசெய்யப்பட்டு இந்த தற்காலிக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கபில்தேவின் சாதனைக்காக மைதானத்தில் பறக்கவிடப்பட்ட 432 பலூன்கள்!

ABOUT THE AUTHOR

...view details