இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ். இவர் தலைமையில் இந்திய அணி 1983ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலகக்கோப்பைத் தொடரில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் கிரிக்கெட் விளையாட்டு பெரும் பிரபலமடைந்தது.
61 வயது நிரம்பிய கபில் தேவ், முன்னதாக பிசிசிஐ-இன் பயிற்சியாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற்றிருந்தார். கிரிக்கெட் பற்றி தனது விமர்சனங்களை அவர் எந்தவித சமரசமும் இல்லாமல் முன்வைத்தும் வந்தார்.
இந்நிலையில், நெஞ்சு வலி காரணமாக டெல்லி மருத்துவமனையில் கபில் இன்று (அக்.23) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கபில் தேவ் விரைவாக குணமடைய வேண்டி இந்திய கிரிக்கெட் வீரர்கள் தவான், கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீரர் கம்பீர், சுரேஷ் ரெய்னா, ஆகாஷ் சோப்ரா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:“நிறைய பேருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு நம்பிக்கை உண்டு”- கோலி