தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டராக வலம்வந்தவர் ஜே.பி. டுமினி. இவர் ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பொம்மி ம்பாங்வா (Pommie Mbangwa) உடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாற்றினார். அப்போது, தனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேனாக இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவை டுமினி தேர்வு செய்துள்ளார்.
இது குறித்து பேசிய டுமினி, ”கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன் ரோகித் சர்மாதான். அவர் ஆடும் ஃபுல் சாட் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.