தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

குறுகிய கால ஐபிஎல் தொடர் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்: பட்லர்! - ஐபிஎல் 2020

லண்டன்: இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், குறுகிய கால ஐபிஎல் தொடர் நடக்கும் என எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

jos-buttler-hopeful-that-shortened-ipl-can-go-ahead-this-year
jos-buttler-hopeful-that-shortened-ipl-can-go-ahead-this-year

By

Published : Mar 26, 2020, 6:01 PM IST

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நடக்கயிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் தொடர் பற்றி இங்கிலாந்து வீரர் பட்லரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில், ''இதுவரை ஐபிஎல் தொடர் பற்றி எவ்வித செய்தியும் இல்லை. சில நாள்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். ஆனால் தற்போதைய சூழலில் ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் தொடர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் குறுகிய கால ஐபிஎல் தொடராக நடக்கும் என எதிர்பார்க்கிறேன். போட்டிகளின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என நினைக்கிறேன்'' என்றார்.

இதையும் படிங்க:‘ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை!’ - கங்குலி

ABOUT THE AUTHOR

...view details