தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜாஸ் பட்லர் மிகவும் மோசமான வீரர் : ஸ்டீவ் ஸ்மித் - ஜாஸ் பட்லர்

இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் மிகவும் அதிரடியான பேட்ஸ்மேன் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஜாஸ் பட்லர்

By

Published : Mar 19, 2019, 3:15 PM IST

இது குறித்து அவர் கூறுகையில், ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இதுவரை நான் விளையாடியதில்லை. இதனால், ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள போட்டியைக் காண ரசிகர்கள் அதிக அளவில் வருகை தரவதோடு எங்களுக்கு ஆதரவும் அளிப்பார்கள் என்றார்.

மேலும், இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லருடன் விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் அவர் தலைசிறந்த வீரர் எனவும் ஸ்டீவ் ஸ்மித் புகழாரம் சூட்டினார்.

கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடிய பட்லர் ஐந்து அரைசதம் உட்பட 548 ரன்களை விளாசினார்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது. மார்ச் 26ஆம் தேதி ஜெய்ப்பூரில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details