தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய அணிக்கு ஃபீல்டிங் பயிற்சியாளராக வராதது ஏன்? காரணம் கூறிய ஜான்டி! - ஐபிஎல்

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படாதது பற்றி ஜான்டி ரோட்ஸ் மனம் திறந்துள்ளார்.

jonty-rhodes-reveals-why-his-application-for-team-india-fielding-coach-got-rejected
jonty-rhodes-reveals-why-his-application-for-team-india-fielding-coach-got-rejected

By

Published : Mar 9, 2020, 5:27 PM IST

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ். இவரின் ஃபீல்டிங்கால் பல போட்டிகளை தன் அணியின் பக்கம் மாற்றியுள்ளார். ஃபீல்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது வாங்கிய ஒரே வீரர் ரோட்ஸ் மட்டுமே. இவரை ஃபீல்டிங் பயிற்சியாளராக மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அழைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் இவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.

இதுபற்றி ட்விட்டரில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, 'எனது உதவி தேவையில்லை என அவர்கள் நிராகரித்துவிட்டார்கள்'' எனப் பதிலளித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் பேசுகையில், ''ஜான்டி இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருப்பதற்கு சரிவருவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஸ்ரீதர் இந்திய அணியோடு ஏற்கனவே பயணம் செய்வதால் அவரையே மீண்டும் தேர்வு செய்துள்ளோம். அவர் சரியானத் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார்'' என்றார்.

இப்போது ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணில் அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராகவும், வாசிம் ஜாஃபர் பேட்டிங் பயிற்சியாளராகவும் செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:’ஃபீல்டிங் பருந்து’ ஜான்டி ரோட்ஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details