தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நிற வெறியால் அவமதிக்கப்பட்ட ஆர்ச்சர்! - England Cricket Player Archer is Racially abused

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நிற வெறியால் அவமானப்பட்ட போது தன்னால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் மன வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார்.

Jofra Archer says he was racially abused
Jofra Archer says he was racially abused

By

Published : Nov 26, 2019, 9:39 AM IST

பெ ஓவல் நகரில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

இதில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுக்க, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது.

இதைத்தொடர்ந்து, 262 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், நியூசிலாந்து அணி இப்போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இதனிடையே, இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட்டுக்காக களமிறங்கிய ஆர்ச்சரை நோக்கி ரசிகர் ஒருவர், அவரது நிறத்தை குறித்து கிண்டல் செய்துள்ளார்.

போட்டி முடிந்தவுடன் நிற வெறியால் வேதனை அடைந்த ஆர்ச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

' பேட்டிங்கில் எனது அணிக்காக போராடிய போது நிற வெறியால் அசிங்கப்பட்டது மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த ஒரு நபரைத் தவிர போட்டியைப் பார்க்க வந்த அனைத்து ரசிகர்களும் சிறப்பாக இருந்தனர்' என வேதனையுடன் ட்வீட் செய்தார்.

சிசிடிவி உதவியுடன் ஆர்ச்சரை நிற வெறியால் விமர்சித்த நபரை தேடி வருவதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆர்ச்சருக்கு நேர்ந்த இந்த பிரச்னைக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கேட்கவுள்ளது.

இதையும் படிங்க: இனவெறி சர்ச்சை - ட்ரம்ப் கருத்தும்; ஒபாமா பதிலும்!

ABOUT THE AUTHOR

...view details