மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் பங்கேற்றுள்ள இந்திய மகளிர் அணி, தற்போதுவரை நடைபெற்ற மூன்று லீக் போட்டிகளிலும் வென்று முதல் அணியாக உலகக்கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று நியூலாந்து அணியுடனான போட்டிக்கு முன்பு இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஸ்திரேலிய பொண் பாதுகாப்புக் காவலர் ஒருவருடன் இணைந்து நடனமாடியுள்ளார். இதனைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.