தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பும்ரா கண்ணை பதம் பார்த்த பந்து! மீண்டும் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் - indian cricket team

ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த பந்து வீச்சாளராக இருக்கும் பும்ரா பயிற்சியின்போது கண்ணில் காயம் ஏற்பட்டு விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஜாஸ்பிரிட் பும்ரா

By

Published : Apr 8, 2019, 10:31 AM IST

Updated : Apr 8, 2019, 1:09 PM IST

இந்திய அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளர் என பெயர் பெற்றிருக்கும் பும்ரா தற்போது நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் டெல்லி அணிக்கு எதிராக அவர் விளையாடியபோது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில போட்டிகளிலிருந்து பும்ரா விலகி இருந்தார்.

இதனையடுத்து உடல்நிலை தேறியவுடன் மீண்டும் அவர் போட்டியில் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று பயிற்சி மேற்கொண்டிருந்தபோது பும்ராவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு மறுபடியும் விளையாடமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கிரிக்கெட் ரசிகர்கள் , ‘பும்ரா சிறந்த பந்து வீச்சாளர். அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியவில்லை என்பது வருத்தத்தை அளித்தாலும், உலகக் கோப்பை நெருங்கிவரும் இத்தருணத்தில் தனது உடல்நிலையில் அவர் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என கூறிவருகின்றனர்..

Last Updated : Apr 8, 2019, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details