தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முதல் டெஸ்ட் போட்டிக்கான வாசிம் ஜாஃபரின் பிளேயிங் லெவன்! - விராட் கோலி

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய உத்தேச அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்.

Jaffer picks India's playing eleven for 1st Test against England
Jaffer picks India's playing eleven for 1st Test against England

By

Published : Feb 1, 2021, 5:04 PM IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிப்ரவரி 05ஆம் தேதி தொடங்கவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடந்த ஜனவரி 27ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்து, ஒரு வார காலம் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தற்போது தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள வீரர்கள் அனைவரும், இன்றிலிருந்து தங்களது பயிற்சிகளுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தனது ட்விட்டர் பக்கத்தில், முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் உத்தேச அணியைத் தேர்வு செய்துள்ளார்.

வாசிம் ஜாஃபரின் தேர்வு செய்துள்ள இந்திய அணி:

ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், அக்சர் படேல்*, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ்/ ஷர்துல் தாக்கூர், இஷாந்த் சர்மா/முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

* இங்கிலாந்து அணி வீரர்கள் இடகை சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறுவர் என்பதால், இப்போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் படேலை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50% பார்வையாளர்களுக்கு அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details