தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'இது மிகப்பெரும் அவமானம்; எங்கள் ரசிகர்களை நான் வெறுக்கிறேன்' - ஜஸ்டின் லங்கர்

சிட்னி டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட இனவெறி சர்ச்சைக்கு ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் தனது வேதனையைத் தெரிவித்துள்ளார்.

It's a shame, one of my greatest pet hates: Langer after India players racially abused
It's a shame, one of my greatest pet hates: Langer after India players racially abused

By

Published : Jan 10, 2021, 6:15 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் ஏற்பட்டுள்ள இனவெறி சர்ச்சைக்கு எதிராக பல்வேறு பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பறியிற்சியாளர் லஸ்டிங் லங்கர் கூறுகையில், "சமீபத்தில் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் குறித்து நல்ல ஒரு புத்தகத்தையும், ஆவணப்படத்தையும் பார்த்து வியப்படைந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சியானது இவ்வளவு சீக்கிரம் மறையும் என்பது எனக்கு தெரியவில்லை.

நமது நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளவர்களிடம் இனவெறி சர்ச்சையை நமது ரசிகர்கள் ஏற்படுத்தியிருப்பது வருத்தத்திற்குரிய செயல். மேலும் இது ஆஸ்திரேலியாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரும் அவமானம்.

'இது மிகப்பெரும் அவமானம்; எங்கள் ரசிகர்களை நான் வெறுக்கிறேன்'

இச்செயலை நான் ஒரு வீரர், பயிற்சியாளர், சக மனிதனாக எனது நாட்டில் நடைபெற்றுள்ளதை என்பதை எண்ணி வருத்தமடைகிறேன். இன்றும் (ஜன.10), நேற்றிரவும் (ஜன.9) சிட்னியில் நாம் கேள்விப்படுகின்ற சம்பவங்களால் இத்தொடர் சிதைந்து போவதைப் பார்ப்பதற்கு வெட்கக்கேடாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சயீத் முஷடாக் அலி: ஜார்கண்டை வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details