தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'கப்பு மேல ஆச இருந்த இத செய்யவே கூடாது' - பொல்லார்ட் - ஐபிஎல் 2020

அபுதாபி: ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஜெயித்து கோப்பையைக் கைப்பற்ற வேண்டுமென்றால் தவறுகளே செய்யக் கூடாது என்று பொல்லார்ட் கூறியுள்ளார்.

Pollard
Pollard

By

Published : Nov 10, 2020, 5:43 PM IST

2020 ஐபிஎல் தொடர் இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற டெல்லி அணியும் மோதுகின்றன. இதனால் இப்போட்டிக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

ஐந்தாவது முறை மும்பை அணி கோப்பையை வெல்லப் போகிறதா அல்லது டெல்லி அணி முதல் கோப்பையை வெல்லப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இச்சூழலில் இப்போட்டி குறித்து மும்பை அணியின் நட்சத்திர வீரர் பொல்லார்ட் தன்னுடைய கருத்துகளைக் கூறியுள்ளார்.

அவர், “இறுதிப் போட்டி என்றாலே அதற்கு பிரஷர் நிறைந்த போட்டி என்றே கூற வேண்டும். இரு அணிகளின் வீரர்கள் அனைவருக்குமே பிரஷர் இருக்கும். போட்டியை வெல்ல வேண்டும் என்றால் விளையாட்டில் தவறுகளே செய்யக் கூடாது. அதேசமயம் போட்டி முடிந்த பிறகு அப்போட்டியை சாதாரண ஒரு போட்டியாகவே கருத வேண்டும்.

இறுதிப் போட்டியைக் காண ரசிகர்கள் இல்லையென்றாலும் இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்த வேண்டும். ஏனென்றால் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு அடுத்து ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியே உலகின் பெரிய போட்டியாகக் கருதப்படுகிறது” என்றார்.

இப்போட்டி குறித்துப் பேசிய மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே, “கிரிக்கெட்டில் இது மற்றுமொரு போட்டி தான். அதைத் தாண்டி பெரிதாக நான் சிந்திக்கவில்லை. ஆட்டத்தில் வீரர்கள் திறமைகளைச் செயல்படுத்துவதில் தான் சூட்சுமமே உள்ளது. ஏனெனில் இது பேட்டுக்கும் பந்துக்கும், ரன்களுக்கும் விக்கெட்களுக்கும் நடைபெறுகின்ற போட்டி.

இதேபோன்ற பல போட்டிகளில் விளையாடிய எங்களது வீரர்கள் சிலர் இருக்கின்றனர். கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்” என்றார்.

இதையும் படிங்க:மகளிர் டி20 சேலஞ்ச்: சாம்பியன்ஸ் ட்ரையல் ப்ளேசர்ஸ் அணியின் வண்ணமயமான புகைப்படங்கள்...!

ABOUT THE AUTHOR

...view details