சென்னை: 14ஆவது ஐபிஎல் தொடரின் தொடக்கம் ஆட்டம் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஏப்.8) நடைபெறுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி இன்றி போட்டிக்கு முன் தொடரின் தொடக்க நிகழ்ச்சியானது நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி டிசிசிஐ நிர்வாகத்தினருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
IPL 2021: டிசிசிஐ நிர்வாகிகளை தொடக்கப் போட்டிக்கு அழைத்த பிசிசிஐ செயலாளர்
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியத்தை (டிசிசிஐ) நாளை (ஏப்.9) நடைபெறவிருக்கும் தொடக்க போட்டியில் பங்கெடுக்குமாறு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
டி.சி.சி.ஐ தலைவர் மகாந்தேஷ் ஜி.கே, ஜெய் ஷாவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். "உலகின் மிகப்பெரிய டி 20 போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள எங்களை அழைத்ததற்காக ஜெய் ஷாவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். ஆரம்பத்தில் இருந்தே அவர் எங்களுக்கு மிகவும் ஊக்கமளித்து வருகிறார், நாட்டில் மாற்றுத்திறனாளின் கிரிக்கெட்டையும் ஊக்குவித்து வருகிறார்" என்று அவர் கூறினார்.
பிசிசிஐ தலைவர் மகாந்தேஷ் ஜி.கே, துணைத் தலைவர் சுமித் ஜெயின், பொதுச்செயலாளர் ரவி சவுகான், கூடுதல் பொதுச்செயலாளர் அபய் பிரதாப் சிங், பொருளாளர் ஜான் டேவிட் பல்வேறு வகையான கிரிக்கெட்டின் பல்வேறு வடிவங்களைக் குறிக்கும் தொடக்க ஆட்டத்தில் கலந்து கொள்வார்கள் கூறப்பட்டுள்ளது.