ஹைதராபாத்: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் 10 போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால் மஹாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வான்கடே மைதான ஊழியர்கள் சிலருக்கும் கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் முகமது அசாருதீன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
" இந்த கடினமான சூழலில் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டியது அவசியமாகிறது. ஹைதாராபாத் கிரிக்கெட் சங்கம், ஐபிஎல் போட்டிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கத் தயாராக உள்ளது. ஐபிஎல் தொடர் பாதுகாப்பான இடங்களில் நடைபெறுவதற்கு உறுதி செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.