ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார். அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு டி காக் - ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி, ஐபிஎல் தொடரில் தனது எட்டாவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 79 ரன்களை விளாசினார்.
இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்மித், சாம்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மேலும் ஐபிஎல் தொடரில் தனது 10ஆவது அரைசதத்தையும் பதிவு செய்து அசத்தினார்.
பின்னர் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோஸ் பட்லரும் ஆட்டமிழந்து வெளியேற ராஜஸ்தான் அணியின் தோல்வி ஏறத்தாழ உறுதியானது. பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஐபிஎல் 2020: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை அபார வெற்றி! - மும்பை vs ராஜஸ்தான்
மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
IPL 13 - MI vs RR result
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.