தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் காலமானார்...! - மூத்த முதல்தர கிரிக்கெட் வீரரான வசந்த் ராய்ஜி

இந்தியாவின் மூத்த முதல்தர கிரிக்கெட் வீரரான வசந்த் ராய்ஜி இன்று உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

indias-oldest-first-class-cricketer-vasant-raiji-passes-away
indias-oldest-first-class-cricketer-vasant-raiji-passes-away

By

Published : Jun 13, 2020, 5:17 PM IST

இந்தியாவின் மூத்த முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி. இவர் 9 முதல் தர போட்டிகளில் பங்கேற்று 277 ரன்கள் சேர்த்துள்ளார். மும்பை மற்றும் பரோடா அணிகளுக்காக தொடக்கம் கொடுத்தவர்.

சமீபத்தில் தனது 100ஆவது பிறந்தநாளை இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் ஆகியோருடன் கொண்டாடினார். அந்தப் புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.20 மணிக்கு வயது முதிர்வு காரணமாக வசந்த் ராய்ஜி காலமானார்.

இவர் காலமானதைத் தொடர்ந்து பிசிசிஐ தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இவருக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களது இரங்கலைப் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் காலமானது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details