இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பார்வைத் திறனற்ற நேபாளம் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வென்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று கான்பூரில் நடைபெற்றது.
நேபாளத்தை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி! - இந்திய அணி
நேபாளம் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பார்வை திறனற்ற இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 40 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுனில் 76, ஃபைசல் 59 ரன்கள் அடித்தனர். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய நேபாளம் அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், இந்திய அணி 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.
இதையும் படிங்க:கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அணி வீரர்களை வரவேற்க ஆளில்லை!