இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 1999ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடி தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையேயான ஒரு நாள் போட்டியில் களமிறங்கியதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு மேல் சர்வேதசப்போட்டிகளில் விளையாடிய முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார்.
இதற்காக பல்வேறு தரப்பிலும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் ட்விட்டரில் இளைஞர் ஒருவர் 'வாழ்த்துகள் தமிழச்சி' என்று தெரிவித்திருந்தார். அந்தப்பதிவிற்கு சுகு என்பவர், அவருக்கு தமிழ் தெரியாது என்றும் இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேசத்தெரியும் என்றும் பதிவிட்டிருந்தார்.